‘7 ஆண்டுகள் காத்திருந்து கொலை..’ ‘மகளை பாலியல் வன்கொடுமை செய்தவரை பழி தீர்த்த தந்தை..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | May 30, 2019 03:32 PM

தேனியில் மகளை பாலியல் வன்கொடுமை செய்தவரை 7 ஆண்டுகள் காத்திருந்து வெட்டிக் கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

after 7 year wait man kills daughters rapist in theni

சீலயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கோச்சடையான் என்பவருக்கு 15 வயதில் மகள் இருந்துள்ளார். 7 ஆண்டுகளுக்கு முன் வாய் பேச முடியாத அவரை வீட்டின் அருகில் வசித்த ரத்தினவேல் பாண்டியன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.  இதனால் அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் ரத்தினவேல் ஜாமீனில் வெளியே வந்ததால் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தன்னுடைய ஒரே மகளை இழந்த கோச்சடையான் அதற்கு பழி வாங்குவதற்காக காத்திருந்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை வேப்பம்பட்டி சாலையில் ரத்தினவேலை வழிமறித்த கோச்சடையான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் அவரை வெட்டியுள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய கோச்சடையானை நேற்று போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். பட்டப்பகலில் பொதுமக்கள் முன்னிலையில் நடந்த இந்தக் கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHILDABUSE #MURDER