'ஓட ஓட இளைஞரை விரட்டி வெட்டிக் கொன்ற கொடூரம்'... அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 31, 2019 06:37 PM

வாகன ஓட்டிகள் முன்னிலையில் தேசிய நெடுஞ்சாலையின் நடுவே ஒருவர், ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man hacked to death in broad daylight in Sangareddy telangana

தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள ருத்ராரம் தேசிய நெடுஞ்சாலையில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி அரிவாளுடன் ஓடி வந்த ஒருவர், அந்த நபரை வெட்ட முயற்சித்துள்ளார். இதை கண்ட அந்த நபர் சாலையில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு தலைதெறிக்க ஓடியுள்ளார். ஆனால் அவரை விடாமல் துரத்தி சென்று கொடூரமாக சாலையின் நடுவே வெட்டியுள்ளார்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த நபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். கண்டதுண்டமாக வெட்டி கொலை செய்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் கொலை செய்தவர் தப்பிச் சென்றார். இதைப் பார்த்து உறைந்த வாகன ஓட்டிகள், தத்தமது வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டனர். இதுதொடர்பான காட்சிகள் அங்கிருந்தவரின் கைபேசியில் படம்பிடிக்கப்பட்டது. இது தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கொலை செய்யப்பட்ட நபரின் உடலை கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அந்த நபர் போலக்பூரை சேர்ந்த மகபூப் என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கெனவே பல கொலை வழக்குகள் உள்ள நிலையில், முன்பகை காரணமாக கொல்லப்பட்டாரா என காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #MURDER #TELANGANA