காயம் சரியாகததால் விலகும் நட்சத்திர வீரர்..! மற்றொரு வீரருக்கு அடித்த அதிர்ஷ்டம்..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 07, 2019 06:07 PM

ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது ஷாசாத் காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார்.

World Cup 2019: Mohammad Shahzad has been ruled out of World Cup

12 -வது உலகக்கோப்பை தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 30 -ம் தேதி தொடங்கிய லீக் சுற்றில், இதுவரை 10 போட்டிகள் முடிந்துள்ளன. இதில் நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா இரு வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இரண்டு இடங்களில் உள்ளன.

இந்த உலகக்கோப்பைத் தொடரில் விளையாடிய இரு போட்டிகளிலும் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் அந்த அணியின் விக்கெட் கீப்பரும், நட்சத்திர வீரருமான முகமது ஷாசாத் காயம் காரணமாக உலகக்கோப்பைத் தொடரில் இருந்து விலகியுள்ளார். கடந்த மாதம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் போது முகமது ஷாசாத்துக்கு காயம் ஏற்பட்டது. ஆனாலும் உலகக்கோப்பை லீக் சுற்றின் முதல் இரண்டு போட்டிகளிலும் முகமது ஷாசாத் விளையாடினார்.

இதனால் காயத்தின் வீரியம் அதிகமாகியதால் முகமது ஷாசாத் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து முகமது ஷாசாத்-க்கு பதிலாக இக்ராம் அலி அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Tags : #ICCWORLDCUP2019 #MOHAMMAD SHAHZAD #INJURY