'சொன்னா கேட்கமாட்ட'...'கல்யாணம்' பண்ணதுக்கு அப்புறமும்'...என் 'தங்கச்சி' கிட்ட பேசுறியா?

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jun 07, 2019 03:15 PM

தனது தங்கையிடம் பழகியதால் இலங்கை அகதி ஒருவர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் நாகர்கோயில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Married man Killed in Love Issues nagercoil police arrest 3 people

நாகர்கோவிலை அடுத்த கணிகமாணிக்கபுரம் சுடுகாட்டுப் பகுதியில்,எரிந்த நிலையில் பிணம் ஒன்று கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த பகுதிக்கு விரைந்த காவல்துறையினர், பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டார்கள்.பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்டதால் முதலில் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவியது.இதையடுத்து காவல்துறையினரின் விசாரணையில்,திருநெல்வேலி மாவட்டம் சமூகரங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த ரெசி (34) என்பவர்தான் எரித்துக் கொல்லப்பட்டவர் எனத் தெரிய வந்தது.

ஏற்கனவே திருமணம் ஆன இவர் வள்ளியூரில் வசித்து வந்துள்ளார்.மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையில், மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வந்துள்ளார். இதையடுத்து இவருக்கும் கன்னியாகுமரி அருகே பெருமாள்புரம் அகதிகள் முகாமில் உள்ள பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இருவரின் பழக்கத்தை அறிந்த அந்த பெண்ணின் சகோதரன் கேதீஸ்வரன் இருவரையும் கண்டித்துள்ளார். ஆனால்,ரெசி தொடர்ந்து அந்தப் பெண்ணுடன் நெருங்கி பழகி வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் இரவு வள்ளியூரில் வைத்து ரெசிக்கும் கேதீஸ்வரனுக்கும் இதுதொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த கேதீஸ்வரன்,தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரெசியை சரமாரியாக குத்தியுள்ளார்.பின்னர் கேதீஸ்வரன் தனது நண்பர்கள் உதவியோடு ரெசியை காரில் ஏற்றி நாகர்கோவிலுக்கு கொண்டு வந்துள்ளார்கள். பின்னர், கணிகமாணிக்கப்புரம் சுடுகாட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றி ரெசியை எரித்துள்ளனர். இதையடுத்து காவல்துறையினர் இலங்கை அகதியான கேதீஸ்வரன் மற்றும் அவர்களது நண்பர்களை கைது செய்துள்ளார்கள்.

Tags : #MURDER