தாயிடம் குடிபோதையில் தகராறு செய்த தம்பி.. ‘கல்லால் அடித்துக் கொலை செய்த அண்ணன்..’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Jun 04, 2019 07:24 PM

கரூர் அருகே தாயிடம் குடிபோதையில் தகராறு செய்த தம்பியை கல்லால் அடித்துக் கொன்ற அண்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

man kills brother with heavy stone in Karur

ஆத்தூர் நத்தமேடு சோளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சுப்ரமணி. இவருடைய மனைவி அம்சவள்ளி (42), மகன்கள் நந்தகுமார் (21), கவுதம் (19). தாய் அம்சவள்ளியிடம் இரண்டு நாட்களுக்கு முன் குடிபோதையில் கவுதம் தகராறு செய்துள்ளார்.

இதைக் கேள்விப்பட்ட நந்தகுமார் பாட்டி வீட்டிற்கு சென்று அங்கிருந்த கவுதமிடம் இதுகுறித்துக் கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த நந்தகுமார் அங்கிருந்த அம்மிக்கல்லை எடுத்து கவுதம் தலையில் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த கவுதமை அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரைப் பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் நந்தகுமாரைக் கைது செய்துள்ளனர்.

Tags : #FAMILY #MURDER