'ஏன்டா இப்படியாடா ஓடுவ...!' திடீரென வீட்டிலிருந்து ஓடிய மாப்பிள்ளை... பின்னாடியே ஓடிய உறவினர்கள்... சுவாரஸ்யமான சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Issac | Jan 23, 2020 11:42 AM

திருமணநாளன்று மாப்பிள்ளை வீட்டிலிருந்து ஓடியநிலையில் மாப்பிள்ளையின் உறவினர்கள் பின்னாலேயே ஓடிய சம்பவம் வைரலாக பரவி வருகிறது.

Relatives who ran away from the house after the wedding

மத்தியப்பிரதேச மாநிலம் இந்திரை சேர்ந்த நீரஜ் மால்வியா என்பவருக்குச் சமீபத்தில் திருமணம் நடந்தது. அவர் வீட்டிலிருந்து திருமண மண்டபம் சுமார் 11 கி.மீ தூரத்தில் உள்ளது.

வழக்கமாகத் திருமணத்திற்குத் திருமண மண்டபத்திற்கு மாப்பிள்ளை அழைத்துச் செல்லப்படும் போது அலங்காரம் செய்யப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். ஆனால் நீரஜ் அவ்வாறு அழைத்துச் செல்லப்படவில்லை.

மாறாக நீரஜ் வீட்டிலிருந்து திருமண மண்டபத்தை நோக்கி ஓடத்துவங்கினர். அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களும் அவருக்குப் பின்னாலேயே ஓடித்தான் சென்றனர். மாப்பிள்ளை கோலத்தில் ஒருவர் ஓட பின்னர் உறவினர்கள் ஓடியதைப் பார்த்து ஏதோ திருமண மண்டபத்தில் சண்டை நடந்துவிட்டது என்றே பலரும் கருதினர்.

ஆனால் ஓடி திருமண மண்டபத்திற்கு வந்த மாப்பிள்ளையைப் பார்த்த சிலர் அவரிடம் கேட்டபோது தான் ஒரு உடற்பயிற்சியாளர் என்றும், மக்களுக்கு உடல் பயிற்சி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு செய்ததாக பதிலளித்தார். இது பலரும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மக்களின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்து அதை வைத்து பிரச்சாரம் செய்வதால் அந்த விஷயம் மக்கள் மனதில் நன்றாகப் பதியும் என்பதாலும். இந்த விஷயம் செய்தியாகி இப்பொழுது நீங்கள் படிப்பது போல் பலர் படிப்பார்கள் இதனாலும் விழிப்புணர்வு ஏற்படும் என்பதாலும் அவர் இதைச் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Tags : #MARRIAGE #RUNNING