'அஸ்வினை' தட்டித்தூக்கிய.. பிரபல அணி.. பஞ்சாப் அணியின் புது 'கேப்டன்' இவர்தான்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Nov 05, 2019 11:18 PM

இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் கடந்த 2 வருடங்களாக பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். அந்த அணி 2018-ம் ஆண்டு 7-வது இடத்தையும், கடந்த வருடம் 6-வது இடத்தையும் பிடித்தது. இதனால் புதிய கேப்டனாக கே.எல்.ராகுலை நியமிக்க பஞ்சாப் அணி முடிவு செய்தது. மேலும் டெல்லி அணி அஸ்வினை வாங்குவதாகவும் பேச்சு அடிபட்டது.

Delhi Capitals Complete Ravichandran Ashwin Deal Says Report

ஆனால் இதற்கு பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர் நெஸ் வாடியா மறுப்பு தெரிவித்தார். அனில் கும்ப்ளே ஆலோசனையின் பேரில் அஸ்வினை அணி தக்க வைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.

இந்தநிலையில் அஸ்வினை டெல்லி கேபிடல்ஸ் அணி தட்டித் தூக்கியுள்ளதாக தகவல்கள் கூறியுள்ளன. இதுகுறித்து டெல்லி அணியின் மூத்த அதிகாரிகள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என ஐஏஎன்எஸ் நிறுவனத்துக்கு தெரிவித்துள்ளனர்.அதேநேரம் பஞ்சாப் அணியின் புதிய கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.