"சண்டை போட்ட பசங்க எல்லாம் இங்க வாங்க..." "1330 குறளையும் இப்ப அங்கிளுக்கு எழுதி காட்றிங்க..." போலீசாரின் 'நூதன' தண்டனை...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Feb 06, 2020 10:43 PM

நெல்லை டவுனில் மோதலில் ஈடுபட்ட மாணவர்களை திருக்குறளை எழுத வைத்து போலீசார் நூதன முறையில் தண்டனை வழங்கியது பொது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

Police have punished the students involved in the clash

நெல்லை டவுனில் செயல்பட்டு வரும் ஒரு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தங்களுக்கிடையே பலமாகத் தாக்கிக் கொண்டு மோதலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற நெல்லை டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வர், சப்-இன்ஸ்பெக்டர் மகாலெட்சுமி மற்றும் போலீசார், மோதலில் ஈடுபட்ட இரு தரப்பினரை சேர்ந்த 13 மாணவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். பின்னர் மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து மோதலில் ஈடுபட்ட 13 மாணவர்களையும், 1330 திருக்குறளையும் எழுத வைத்து நூதன தண்டனை வழங்கினர். போலீசாரின் இச்செயல் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

Tags : #THIRUNELVELI #STUDENTS #CLASH #POLICE PUNISHED #THIRUKKURAL