'ஏன்டா பள்ளிக்கு போகல...?' 'ஒரு மாசமா ரூம்ல வச்சு...' 'இத பத்தி யார்கிட்டேயும் வாய் திறக்க கூடாது...' மன உளைச்சலில் சிறுவன் செய்த அதிர்ச்சிக் காரியம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த அலுவலக உதவியாளரை போலீசார் கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள அமெரிக்கன் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் 15 வயது சிறுவனை அந்தப் பள்ளியின் அலுவலகத்தில் உதவியாளராக பணியாற்றக்கூடிய ஆசீர் சுதாகர்ராஜ் என்பவர், கடந்த ஒரு மாதமாக பள்ளியின் அலுவலக அறையில் வைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து சித்திரவதை செய்துள்ளார். இதைப்பற்றி வெளியில் யாரிடமும் சொல்லக் கூடாது எனவும் மிரட்டியுள்ளார்.
இதனால் கடந்த ஒரு வாரமாக மன உளைச்சல் ஏற்பட்டு பள்ளிக்குச் செல்லாத அந்த சிறுவனை அவனது தாயார் பள்ளிக்கு போகச் சொல்லியும், ஏன் பள்ளிக்குச் செல்லவில்லை என்பதற்கான காரணத்தை கூறும் படியும் வற்புறுத்தியுள்ளார். இதனால் அந்த சிறுவன் அதிகமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனை அறிந்த அவரது தாயார் மதுரை கே.புதூர் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் தனது மகனை சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். பின்னர் இதுகுறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தாயார் தல்லாகுளம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து உடனே காவல் துறையினர் சம்பந்தப்பட்ட பள்ளியில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்த ஆசீர் சுதாகரன் என்பவர் மீது சிறார்களுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
