‘எரிந்த நிலையில் சடலமாக கிடந்த முதல் மனைவி’!.. ‘சிக்கிய பள்ளி ஆசிரியர்’.. விசாரணையில் திடீர் திருப்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Dec 13, 2019 11:31 AM

வீட்டில் எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Husband arrested by police for murdered his wife in Villupuram

விழுப்புரத்தில் உள்ள சுதாகர் நகரில் கடந்த 8ம் தேதி இந்திரா என்ற பெண் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவரின் கணவர் நடராஜன். ஓய்வு பெற்ற ஆசிரியரான நடராஜனுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி இந்திரா விழுப்புரத்தில் வசித்து வந்துள்ளார். இரண்டாவது மனைவி திருக்கோவிலூரில் வசித்து வருகிறார்.

இந்நிலையில் திருக்கோவிலூரில் உள்ள தனது இரண்டாவது மனைவியின் வீட்டுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பியபோது இந்திரா ரத்தக் காயங்களுடன் வீட்டில் இறந்துகிடப்பதாக நடராஜன் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இந்திராவின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கணவர் நடராஜனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் நடத்திய கிடுக்குப்பிடி விசாரணையில் மனைவி கொலை செய்துவிட்டு நடராஜன் நாடகமாடியது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து நடராஜனை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : #CRIME #MURDER #VILLUPURAM #HUSBANAD #WIFE