'ஜாம்பவானைத் தோற்கடித்த சென்னை மாணவன்!'... 'செஸ் போட்டியில் அசத்தல்!'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manishankar | Jan 21, 2020 03:54 PM

சர்வதேச அளவிலான செஸ் போட்டியில், சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவன் ஹர்சவர்தன், ஜார்ஜியாவின் கிராண்ட் மாஸ்டர் மிக்கெய்லை வீழ்த்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

chennai school kid wins a grand master from georgia

12 வது சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், சென்னை வேலம்மாள் பள்ளியைச் சார்ந்த மாணவன் ஹர்சவர்தன், 40 வயது நிரம்பிய ஜார்ஜியாவின் கிராண்ட் மாஸ்டர் மிக்கெய்லை, 4-ஆவது சுற்றில் தோற்கடித்தார்.

விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில், 43 நகர்வுகள் செய்யப்பட்ட நிலையில், ஹர்சவர்தன் வெற்றி பெற்றார். இந்த போட்டியில் வெற்றி பெற்றதால், அவருக்கு 4 புள்ளிகள் கிடைத்துள்ளன. இதனால், என்.ஆர்.விசாக், ஜோஸ் எடுராடோ முதலான கிராண்ட் மாஸ்டர்கள் உள்ள பட்டியலில் ஹர்சவர்தன் முன்னிலை பெற்று உள்ளார்.

அவரது இந்த வெற்றி, செஸ் அபிமானிகள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHESS #SCHOOL #KID