“ஒரு முக்கியமான துப்பு கெடைச்சிருக்கு”.. தமிழகத்தை அதிரவைத்த சேலம் சைக்கோ கொலைகாரன் -காவல்துறை தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Feb 12, 2020 02:13 PM

சேலம் மாநகர போலீஸ் சார்பில் கமிஷனர் செந்தில்குமார், தலைமையில் பொதுமக்களிடையே குறைதீர்க்கும் முகாம் சேலம் பழைய பேருந்து நிலையம் அருகில் இருக்கும் ஒரு மண்டபத்தில் நடைபெற்றது.

we got a clue about salem psycho murderer, says salem cops

அங்கு பொதுமக்களின் குறைகள் அடங்கிய மனுக்களை போலீசார் பெற்றுக்கொண்டனர். இதுபற்றி சேலம் போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியபோது, 2019-ஆம் ஆண்டு ஆகஸ்டு மற்றும் செப்டம்பர் மாதங்களில் பொதுமக்களிடமிருந்து 4915 மனுக்கள் பெறப்பட்டதாகும். அவற்றின் மீது போலீஸார் அடுத்தடுத்து நடவடிக்கை எடுத்ததாகவும், இதில் 228 மனுதாரர்கள், விசாரணையில் திருப்தி இல்லை என்று தெரிவித்ததாகவும், அதன்பிறகு அவர்களை நேரில் வரவழைத்து அவர்களின் மனு மீதான விசாரணை நடத்தப்பட்டு தற்போது தீர்வு காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் சேலத்தில் நேற்று, நடைபெற்ற முகாமில் 90 மனுக்கள் பெறப்பட்டதாகவும், அவர்களில் 70 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், மற்ற மனுக்கள் குறித்த தீவிர விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பேசிய செந்தில்குமார் சேலம் மாநகராட்சியின் சமீபத்தில் நள்ளிரவில் மூன்று முதியவர்கள் கொலை செய்யப்பட்டது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டதாகவும், அதில் ஈடுபட்ட சைக்கோ கொலைகாரன் குறித்த முக்கிய துப்பு கிடைத்துள்ளதாகவும் அதை வைத்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

Tags : #SALEM