'பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான 16 வயது சிறுமி'... 'சிக்கிய மற்றுமொரு இளைஞர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jul 09, 2019 10:46 AM

பொள்ளாச்சியில் 16 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 9 பேரை போலீசார் கைது செய்தநிலையில், 10-வதாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

pollachi sexual harassment case 10th person arrested

பொள்ளாச்சி அருகே 16 வயது சிறுமியை, ஷெரிப் காலனியை சேர்ந்த அமானுல்லா என்பவர் காதலித்து வந்துள்ளார். பின்னர் சிறுமியிடம் திருமணம் செய்துக்கொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி, வீட்டுக்கு அழைத்து பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார். மேலும், இவரது நண்பர்கள் 9 பேரும், சிறுமியை மிரட்டி அவ்வப்போது பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப் பதிந்து அமானுல்லா மற்றும் அவரது நண்பர்கள் 9 பேரை கைது செய்தனர். இதில் தலைமறைவாக இருந்த திண்டுக்கல்லை சேர்ந்த பெயிண்டரான பிரபு என்பவரை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமையன்று முத்தூர் பேருந்து நிறுத்தத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமாக வந்த நபரை பிடித்து விசாரித்தனர். 

அப்போது, அவர் அமானுல்லாவின் நண்பர் பிரபு என்பதும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவர்களில் ஒருவர் என்பது  தெரிய வந்தது. இதையடுத்து போலீசார், பிரபுவை கைது செய்து கோவை மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்

Tags : #SEXUALHARASSMENT #POLLACHI