7-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.. மின்சாரம் பாய்ச்சி கொலைசெய்த மாணவன்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 27, 2019 03:40 PM

திண்டுக்கல் அருகே ஏழாம் வகுப்பு மாணவியை, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

7th standard student raped and murdered by 12th standard student

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே, 13 வயதுச் சிறுமி ஒருவர்,  7 -ம் வகுப்பு படித்து வந்தார். கோடை விடுமுறை என்பதால், தனது வீட்டில் அவர் இருந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி அன்று சிறுமியின் பெற்றோர் வேலைக்குச் சென்றுவிட்டனர். இதனால் சிறுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். வேலை முடிந்து மாலை நேரம், வீடு திரும்பிய பெற்றோர், தங்களது மகள் உயிரிழந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியுற்றனர்.

சிறுமியின் கையில் மின்சார வயர் இருந்ததைக் கண்டதும், பெற்றோருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர், காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற வடமதுரை போலீசார், சிறுமியின் உடலை மீட்டு,பிரேதப் பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனை முடிவில், அந்தச் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் உறவினர்கள், குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், விசாரணையைத் தீவிரப்படுத்திய காவல்துறையினர், அதே ஊரைச் சேர்ந்த 17 வயதான 12-ம் வகுப்பு மாணவனைக் கைது செய்தனர்.

வீட்டில் சிறுமி தனியாக இருந்ததை அறிந்த அந்த மாணவன், அவரை பாலியல் வன்கொடுமை செய்ததும், சிறுமியின் உடலில் மின்சாரத்தை பாய்ச்சி கொடூரமாக கொன்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அச்சிறுவன், கைதுசெய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளான்.

Tags : #SEXUALHARASSMENT #ARREST #DINDUGAL