'அண்ணா.. விட்ருங்கணா’.. கதறிய பெண்கள்.. சீரழித்தவர்களுள் ஒருவரான அதிமுக உறுப்பினர் நீக்கம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 11, 2019 07:02 PM

பொள்ளாச்சியில் 100க்கும் மேற்பட்ட பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்து அவர்களின் வாழ்க்கையை சீரழித்த இளைஞர் கும்பல் போலீஸாரிடம் சிக்கினர்.

member of ADMK who involved in Pollachi Sexual Abuse is dismissed

கோவை பொள்ளாச்சி அருகே எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த சபரிநாதன் என்கிற 25 வயது இளம் பொறியாளர் ஒருவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது மாணவிக்கு பேஸ்புக்கின் மூலம் அறிமுகமாகி சில நாட்கள் கழித்து ஊஞ்சலாம்பட்டிக்கு அப்பெண்ணை வரவழைத்துள்ளார். அங்கு தனது நண்பர்களான திருநாவுக்கரசு(25), சதீஷ்(28), வசந்தகுமார்(27) ஆகியோரையும் வரவழைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணுக்கு நால்வரும் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அப்பெண்ணுக்கு அந்த வீடியோவை வைத்து பல வழிகளிலும் தொல்லை கொடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் மனமுடைந்த அந்த மாணவி பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில் சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோர் பிடிபட்டனர். ஆனால் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு முதலில் பிடிபடவில்லை. இதனிடையே புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய செந்தில் (33), பாபு (26), வசந்தகுமார் (26) உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசுவையும்  காவல்துறை கடைசியாக கைது செய்தது. மேலும்,  இந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்ட சதீஷ், சபரிராஜன், வசந்தகுமார் ஆகியோரின் செல்போனில் இருந்து 40-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.  அந்த வீடியோக்கள் கைப்பற்றப்பட்ட நிலையில், அதில் சிக்கிய பெண்கள் கெஞ்சுகிற நெஞ்சுருக்கும் வார்த்தைகள் அவர்களின் வலிகளை உணர்த்துகின்றன. 

இரக்கமின்றி, பெண்ணை சக மானுட ஜீவராசியாக பார்க்கும் மனோபாவம் கூட இல்லாத இந்த இளைஞர்களின் இந்த கொடூர செயலுக்கு அனைத்து தரப்பிலும் இருந்து கண்டனங்கள் வலுத்து வருவதோடு, இவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனை இன்னும் வலுவானதாக இருக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இதில் அதிமுகவைச் சேர்ந்த பார் நாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் நாகராஜன், அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Tags : #RAPIST #POLLACHI #CCTV #POLLACHISEXUALABUSE