'பொள்ளாச்சி அருகே மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்'... 'பள்ளி மாணவிகளை புகைப்படம் எடுத்து மிரட்டல்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Jun 25, 2019 04:04 PM

பொள்ளாச்சி அருகே பள்ளி மாணவிகளை காதலிக்கக் கூறி, மிரட்டி செல்போனில்  படமெடுத்து சமூக வலைத் தளங்களில் பதிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

school students tortured by youths in pollachi

ஆனைமலை பகுதியைச் சேர்ந்த முகமது சபீர் மற்றும் அவனது நண்பர்கள் வசந்தகுமார், முகமது அர்ஷத், கமர்தீன், முகமது ரியாஸ் ஆகிய 5 பேரும், அப்பகுதியிலுள்ள அரசுப் பள்ளி மாணவிகளை காதலிக்கக் கூறி, தொல்லை செய்து வந்ததாகக் கூறப்படுகிறது. அதற்கு மாணவிகள் சம்மதிக்காததால், பள்ளிக்குச் செல்லும்போது அவர்களை, ஆபாசமாகப் புகைப்படம் எடுத்ததாகத் தெரிகிறது. அத்துடன் நில்லாமல் அந்தப் புகைப்படங்களை, சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியதாகக் கூறப்படுகிறது.

இளைஞர்களின் இந்தச் செயலை தட்டிக்கேட்ட மாணவிகளின் பெற்றோரையும் அவர்கள் மிரட்டியுள்ளனர். இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் ஐந்து பேரையும் கைது செய்து, 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.  இவர்களிடமிருந்து, 4 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அதிர்ச்சி அளித்தநிலையில், இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLLACHI #CELLPHONE