பொள்ளாச்சியில் மீண்டும் கொடூரம்: மாயமான கல்லூரி மாணவி கொலை.. பதறவைக்கும் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 07, 2019 11:32 AM

கோவையில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தறுத்து கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து இவ்வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

coimbatore college girl found dead by murdered after missing bizarre

முன்னதாக கோவை தனியார் கல்லூரி மாணவி ஒருவர் காணாமல் போனதாக காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டிருந்ததை அடுத்து, அந்த பெண்ணை தேடும் பணியில் காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போதுதான் பொள்ளாச்சி- தாராபுரம் சாலையில் இளம் பெண் ஒருவர் கழுத்தறுத்துக் கொல்லப்பட்டு கிடந்துள்ள தகவல் போலீஸாருக்கு கிடைத்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார், அப்பெண்ணை முட்புதருக்குள் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரித்ததில் கல்லூரி படிக்கும் இம்மாணவி காணாமல் போனார் என்பதும் இவரை, அடையாளம் தெரியாத 2 நபர்கள் பின் தொடர்ந்துள்ளதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சிசிடிவி மற்றும் மாணவியின் செல்போன் சிக்னல்களைக் கொண்டு போலீஸார் துப்பு துலக்கி வருவதோடு, மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். சில நாட்களுக்கு முன் பொள்ளாச்சி பாலியல் வழக்கு பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில், அடுத்தடுத்து இதுபோன்ற சம்பவம் பதற்றத்தை கொடுப்பதால், இந்த வழக்கை விசாரிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : #COLLEGESTUDENT #MURDER #SAD #GIRL #POLLACHI