‘கோயிலுக்கு போயிட்டு இருந்தேன்’..‘அன்பா பேசுனாங்க’.. ஆட்டோ டிரைவர்களின் வெறிச்செயல்.. 16 வயது சிறுமியின் பதற வைத்த வாக்குமூலம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Selvakumar | Apr 03, 2019 04:21 PM
கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமியை ஆட்டோ டிரைவர் தன் ஆட்டோவில் ஏற்றி நண்பர்களுடன் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் தொடந்து அரங்கேரிய வண்ணம் உள்ளன. சமீபத்தில் கோவையில் விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதற்குள் கோயிலுக்கு சென்ற சிறுமி ஆட்டோ டிரைவர்களால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரத்தில் கோயிலுக்கு சென்ற 16 வயது சிறுமி வீடு திரும்பவில்லை என காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளனர். புகாரின் அடிப்படையில் போலிஸார் விசாரணை நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில் சாலையோரத்தில் மயங்கிய நிலையில் சிறுமி ஒருவர் இருப்பதாக போலிஸாருக்கு தகவல் வந்துள்ளது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலிஸார், சிறுமியின் உடைகள் கிழிக்கப்பட்டு, உடலில் காயங்களுடன் அலங்கோலமாய் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியாகி உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். சிறுமியைப் பரிசோத்தித்து பார்த்த மருத்துவர்கள், குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து வாக்குமூலம் அளித்த சிறுமி,‘வீட்டில் ஏற்பட்ட சண்டையால் அங்கிருந்து வெளியேறி கோயிலுக்கு சென்று கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோ டிரைவர் என்னிடம் அன்பாக பேசி ஆட்டோவில் ஏற்றி கொண்டு கோயிலுக்கு அழைத்து செல்வதாக கூறினார். நானும் அவரை நம்பி ஆட்டோவில் ஏறினேன். அதன்பிறகு எனக்கு அவர் குளிர்பானம் வாங்கிக் கொடுத்தார். அதை குடித்தபின் என்ன நடந்தது என தெரியவில்லை’ என சிறுமி கூறியுள்ளார்.
மேலும் இது பற்றி தெரிவித்த போலிஸார்.‘சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவிகளை ஆய்வு செய்து பாலியல் வன்கொடுமை செய்த ஆட்டோ டிரைவர்களை கண்டுபிடித்து போக்ஸோ சட்டதின் கீழ் கைது செய்துள்ளோம். தலைமறைவாக இருக்கும் ஆட்டோ டிரைவர் தினேஷ் என்பவரை தேடிவருகிறோம்’ என தெரிவித்துள்ளனர்.
கோயிலுக்கு சென்ற சிறுமி ஆட்டோ டிரைவர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
