‘7 ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை’.. தாயின் 2 -வது கணவர் செய்த வெறிச்செயல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 15, 2019 02:24 PM

7 -ஆம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தாயின் 2 -வது கணவரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

School girl pregnant mother’s 2nd husband harassed in Palani

பழனி அருகே உள்ள பெத்தநாயக்கன்பட்டி என்கிற கிராமத்தைச் சேர்ந்த 7 -ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிக்கு தொடர்ந்து உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. இதனால் சிகிச்சைக்காக பழனியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிறுமியின் பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர்.

சிறுமியை பரிசோதித்துப் பார்த்த மருத்துவர்கள், சிறுமி கர்ப்பமாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர். உடனே இது குறித்து பழனி சார் ஆட்சியரிடம் மருத்துவமனை சார்பில் புகார் அளித்துள்ளனர். இதனை அடுத்து புகார் தொடர்பாக விசாரணை நடத்த காவல்துறைக்கு சார் ஆட்சியர் உத்தரவு பிறப்பித்தார்.

காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் சிறுமியின்,  தாயின் இரண்டாவது கணவர் காமராஜன் என்பது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து இவர் மீது வழக்கு பதிவு செய்த அனைத்து மகளிர் காவல்துறையுனர், போக்சோ சட்டத்தின் கீழ் காமராஜனைக் கைது செய்துள்ளனர்.

Tags : #TAMILNADU #CHILD #ABUSED #SEXUALHARASSMENT #POCSO