பொள்ளாச்சி பாலியல் கொடூரம் எதிரொலி.. 'பார்' நாகராஜனின் பாரை அடித்து நொறுக்கிய பொதுமக்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 13, 2019 05:50 PM

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகி ஜாமினில் வெளிவந்த ‘பார்’ நாகராஜன் என்பவரது  மதுபானக்கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Pollachi issue Nagaraj\'s bar was broken by public

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி பெண்கள், பணிக்கு செல்லும் பெண்கள் என 200 -க்கும் மேற்பட்ட பெண்களை முகநூலின் மூலம் பழகி ஆபாசமாக வீடியோ எடுத்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சபரிராஜன், சதீஷ், திருநாவுக்கரசு, வசந்தக்குமார் ஆகிய நால்வரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தைக் கண்டித்து பல்வேறு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் கண்டனங்களை தெரிவித்தனர். இதனை அடுத்து இவர்கள் நால்வர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. மேலும் இந்த பாலியல் வன்கொடுமையில் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரரை மிரட்டியதாக ‘பார்’நாகராஜன் என்பவர் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இவர் பொள்ளாச்சி கோட்டூர் சாலையில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடைக்கு உள்ளே இருக்கும் பாரை குத்தகைக்கு எடுத்து நடத்திவந்துள்ளார். இந்நிலையில் பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தின் எதிரொலியாக நாகராஜனின் பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலிஸார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #POLLACHISEXUALABUSE #POLLACHICASE #POLLACHI