எஸ்ஐ-யா இருந்தா.. வேற மாதிரி 'கணக்கு' பண்ணிருப்பாரு.. 'வைரல்' வீடியோ!
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Manjula | Dec 02, 2019 01:36 PM
சமூக வலைதளங்களின் அசுர வளர்ச்சியால் யார் என்ன செய்தாலும் அது உடனே அனைவரின் கவனத்திற்கும் வந்து விடுகிறது. அதற்கு இந்த வீடியோவும் விதிவிலக்கல்ல.
வெள்ளகோவில் டூ கரூர் சாலையில் வெள்ளகோவில் காவல்துறை லஞ்சம் வாங்குவதாக வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு திருப்பூர் மாவட்ட கலெக்டர் கார்த்திகேயனுக்கும் நெட்டிசன் ஒருவர் டேக் செய்திருந்தார். அந்த வீடியோவில் போலீஸ் ஒருவர் இருசக்கர வாகனங்களில் செல்வோரிடம் லஞ்சம் வாங்குகிறார். தொடர்ந்து இதுவே எஸ்ஐ-யாக இருந்திருந்தால் வேற மாதிரி கணக்கு பண்ணிருப்பாரு.. நீ என்ன சிரிச்சுக்கிட்டு நிக்கிற என வாகன ஓட்டிகளிடம் சொல்வதும் போலவும் உரையாடல் இருந்தது.
@Vijaykarthikeyn ....வெள்ளகோவில் காவல் துறை..வெள்ளகோவில் to.கரூர் சாலை... ஜெயம் ஸ்கூல் அருகில் சோதனை சாவடியில்...... pic.twitter.com/HCe14wmxTm
— KANDS (@kands06) November 30, 2019
இதைப்பார்த்த கார்த்திகேயன் பதிலுக்கு,'' அவர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். திருப்பூர் எஸ்பி அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்,'' என பதில் அளித்திருக்கிறார். இந்தநிலையில் கார்த்திகேயனின் இந்த நடவடிக்கை மற்றும் நெட்டிசனுக்கு அவர் பதிலளித்த வேகம் ஆகியவற்றை நெட்டிசன்கள் தற்போது பாராட்டி வருகின்றனர்.