‘7 வயது சிறுவனிடம் ஆட்டோகிராப் வாங்கிய விராட் கோலி’.. ‘ரசித்தபடி நின்ற அனுஷ்கா சர்மா’.. ‘வைரலாகும் வீடியோ’..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Saranya | Sep 03, 2019 09:50 PM

விராட் கோலி 7 வயது சிறுவனிடம்ஆட்டோகிராப் வாங்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Virat Kohli Takes Autograph Of 7 YO Fan Video goes Viral

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான வெற்றியின் மூலம் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றியைக் குவித்த இந்திய கேப்டன் என்ற சாதனையைப் படைத்துள்ளார் விராட் கோலி. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி நடைபெற்ற ஜமைக்காவில் 7 வயது சிறுவனிடம் கோலி ஆட்டோகிராஃப் வாங்கும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அனுஷ்காவுடன் சென்று கொண்டிருந்த விராட் கோலியிடம் வந்து சிறுவன் ஒருவர் என்னுடைய ஆட்டோகிராப் உங்களுக்கு வேண்டுமா எனக் கேட்டுள்ளார். அதற்கு சிரித்தபடியே கோலியும் வேண்டுமெனக் கூறி அந்த  சிறுவனின் ஆட்டோகிராபை வாங்கிச் சென்றுள்ளார். உடன் இருந்த அவருடைய மனைவி அனுஷ்காவும் இதை ரசித்தபடி சிரிப்புடன் பார்த்துக்கொண்டிருந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

 

Tags : #VIRATKOHLI #TEAMINDIA #ANUSHKASHARMA #FANBOY #AUTOGRAPH #VIRALVIDEO