‘7 அடி நீள பாம்பு’.. ‘போதையில் மீன் சந்தையில் அட்டகாசம் செய்த நபர்’.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Aug 31, 2019 05:42 PM

புதுக்கோட்டை மீன் சந்தைக்கு குடிபோதையில் நபர் ஒருவர் கையில் பாம்புடன் வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

Drunken man came to market with snake in Pudukkottai

புதுக்கோட்டை புதிய நகராட்சி அலுவலகம் அருகே சந்தைப்பேட்டை உள்ளது. இந்த சந்தையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையன்று காய்கறிகள் முதல் மீன், நண்டு, இறால் உள்ளிட்ட அனைத்து விதமான பொருட்களும் மலிவு விலையில் கிடைக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக மீன் சந்தையில் நேரடியாக கடலில் மீன்களைப் பிடித்து வந்து வார சந்தையில் விற்பது வழக்கமாக உள்ளது. இந்த சந்தைக்கு புதுக்கோட்டை நகர மக்கள் மட்டுமல்லாது சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலிருந்தும் பொதுமக்கள் இந்த வாரச்சந்தைக்கு வந்து தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

இந்நிலையில் நேற்று காய்கறிச்சந்தையும் மீன் சந்தையும் நடைபெற்றுள்ளது. அப்போது அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் சுமார் 7 அடி நீளமுள்ள பாம்பை பிடித்து வந்து மீன் விற்பனையில் ஈடுபட்டவர்களிடம் பாம்பை வைத்துக் கொண்டு மீன் கேட்டும், எடைபோடும் தராசில் பாம்பை எடை போட்டும் அட்டகாசம் செய்துள்ளார். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் குடிபோதையில் உயிருடன் பாம்பை பிடித்து வந்த நபரால் மீன் வியாபாரிகள், மீன் வாங்க வந்த பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #DRUNKENMAN #SNAKE #MARKET #PUDUKKOTTAI