‘இதுதான் அவருக்கு சரியான கிஃப்ட்டா இருக்கும்’.. பிரபல வீரருக்காக பிசிசிஐ வெளியிட்ட வைரல் வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 02, 2019 07:13 PM
இஷாந்த் ஷர்மாவின் பிறந்த நாளுக்கு பிசிசிஐ வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளரான இஷாந்த் ஷர்மா இன்று தனது 31 -வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இந்திய அணிக்காக டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் சார்பாக இஷாந்த் ஷர்மா விளையாடி வருகிறார்.
இப்போட்டியின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ப்ராத்வொய்ட்டின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஆசியாவுக்கு வெளியே அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்களின் பட்டியலில் கபில் தேவ்வை (45 டெஸ்ட், 155 விக்கெட்) பின்னுக்கு தள்ளி இஷாந்த் ஷர்மா (46 டெஸ்ட், 156 விக்கெட்) இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். முதல் இடத்தில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ளே (50 டெஸ்ட், 200 விக்கெட்) உள்ளார். இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய இஷாந்த் ஷர்மாவின் வீடியோ ஒன்றை ட்விட்டரில் பதிவிட்டு பிசிசிஐ அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளது.
Happy Birthday @ImIshant 💐
On his special day, relive one of his fiery spells against Pakistan - not too long ago 😜🎂 #TeamIndia pic.twitter.com/fwZ5J4ITe5
— BCCI (@BCCI) September 2, 2019
