திடீரென காணாமல் போன மாற்றுத்திறனாளி பெண்.. அக்கம்பக்கத்தினர் சொன்ன தகவல்.. அதிர்ச்சியில் உறைந்த கிராமம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்காணாமல் போன மாற்றுத்திறனாளி பெண் அவரது வீட்டின் அருகிலேயே சடலமாக புதைக்கப்பட்டிருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள குள்ளப்ப கவுண்டன்பட்டியைச் சேர்ந்தவர் முத்துப்பேச்சி. மாற்றுத்திறனாளியான இவர் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். கடந்த இரு தினங்களுக்கு முன்பு ரேஷன் கடைக்கு சென்ற முத்துப்பேச்சி காணாமல் போனதாக அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே அவரது வீட்டின் அருகே தரை தோண்டப்பட்டு, பின்னர் மூடி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் அந்த இடத்தை தோண்டி பார்த்தனர். அப்போது காணாமல் போன முத்துப்பேச்சியின் உடல் சடலமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது அப்பகுதியில் உள்ள அவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனை அடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல்போன மாற்றுத்திறனாளி பெண் அவரது வீட்டின் அருகிலேயே சடலமாக புதைக்கப்பட்டு கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
