'டார்ச்சரில் நம்பர் ஒன்!'.. சிறார் உட்பட 16,000 பேரை கொன்று குவித்த 'மான்ஸ்டருக்கு'.. 'இப்ப' என்ன ஆச்சு 'தெரியுமா?'!
முகப்பு > செய்திகள் > உலகம்கம்போடிய நாட்டில் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 16,000 பேரை கைது செய்து சித்திரவதை செய்து கொன்ற முக்கிய அதிகாரி தற்போது மரணமடைந்திருக்கிறார்.

கம்போடியாவில் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்ததற்காக 77 வயதான முன்னாள் முதன்மை சிறை அதிகாரி kaing guek eav மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். 1985 முதல் 1999 வரையிலான காலகட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியின் கீழ் நடந்த கொடூரக் கொலைக்கு உடந்தையாக இருந்த அப்போதைய முதன்மை சிறை அதிகாரியும் அரசியல்வாதியுமான kaing guek eav பின்னர் கைது செய்யப்பட்டார்.
முன்னதாக ஆட்சிக்கு எதிராக குரல் எழுப்பியவர்களும் சட்டத்தை மீறியதாக கைது செய்யபட்ட பொதுமக்களும் என ஆயிரக்கணக்கானவர்களை சித்திரவதை செய்த இவரது கொடூர நடவடிக்கைகளுக்கு சிறார்களும் பிஞ்சுக் குழந்தைகளும் கூட தப்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த சம்பவங்கள் நடந்து சுமார் 30 ஆண்டுகளுக்கு பிறகு இவர் மீதான விசாரணை முன்னெடுக்கப்பட்டு அதன் பின்னர் ஆயுள் தண்டனை தீர்ப்பு விதிக்கப்பட்டது.
இதனால் கம்போடிய பிராந்திய சிறை ஒன்றில் தண்டனை அனுபவித்து வந்த இவர் கடந்த புதன்கிழமை அன்று மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பிறகு இவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

மற்ற செய்திகள்
