உலகின் மிகப்பெரிய கம்பெனிகளால் தேடப்படும் இந்தியர்.. ரியல் கொசக்ஸி பசப்புகழ் இவர்தான்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் நகரத்தைச் சேர்ந்த இளைஞர் அமன் பாண்டே. இவரை கூகுள், பேஸ்புக் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்கள் தங்களுக்காக வேலை செய்யும்படி வலியுறுத்தி வருகின்றன. அப்படி என்ன பாண்டே செய்திருக்கிறார் எனக் கேட்டால் குறை சொல்வதுதான் தன்னுடைய வேலை என்கிறார் அவர்.
சிதம்பரம் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்ட பெண்..பின்னணி என்ன?
70,000 சன்மானம்
அப்ளிகேஷன்களில் உள்ள குறைகளை கண்டுபிடிப்பதில் வல்லவரான அமன் பாண்டே கடந்த 2019-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் அப்ளிக்கேஷன் ஒன்றில் பிழைகள் இருப்பதை கண்டுபிடித்து கூகுள் நிறுவனத்திடம் தெரிவித்திருக்கிறார். இதற்கு பாராட்டு தெரிவித்ததது மட்டுமல்லாமல் கூகுள் நிறுவனம் அமன் பாண்டேவுக்கு ரூ.70,000 சன்மானமாக வழங்கியது.
புதிய நிறுவனம்
கூகுள் நிறுவனம் அளித்த சன்மானத்தை மூலதனமாகக்கொண்டு 'பக்ஸ் மிர்ரர்' என்கிற நிறுவனத்தை தொடங்கி இருக்கிறார் பாண்டே. இந்த நிறுவனத்தில் 15 பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
உலகின் முன்னணி நிறுவனங்கள் பலவும் தங்களது அப்ளிகேஷன்களில் உள்ள குறைகளை கண்டுபிடித்துத் தரும்படி பாண்டேவை தேடி வருகின்றன.
600 பிழைகள்
அமன் பாண்டேவின் பக்ஸ் மிர்ரர் மற்றும் அதன் துணை நிறுவனமான மனாஸ்-ம் இணைந்து இதுவரையில் 600 பிழைகளை கண்டுபிடித்திருக்கின்றனர். இதனால் கோடிக் கணக்கில் கூகுள் நிர்வாகம் இவர்களுக்கு சன்மானம் வழங்கியிருக்கிறது.
இதுகுறித்து அமன் பாண்டே பேசுகையில்,"கூகுள் நிறுவனம் போல் சாம்சங், ஆப்பிள் நிறுவனங்களின் ஆப்ளிக்கேஷன்களிலும் பிழைகளை கண்டுப்பிடித்துள்ளோம். நானும் துணை நிறுவனருமான மானாஸ் சேர்ந்து கூகுள் கீழ் இயங்கும் பல்வேறு அப்ளிக்கேஷன்களில் இருந்து சுமார் 600 பிழைகளை கண்டுப்பிடித்துள்ளோம். இதற்காக கூகுள் நிறுவனம் தங்களுக்கு கோடி கணக்கில் பணம் வழங்கியது. கூகுள் நிறுவனம் போல் சாம்சங், ஆப்பிள் மட்டுமல்லாது பல இந்திய நிறுவனங்களும் எங்களுடன் பணிபுரிய ஆர்வம் காட்டுகின்றன" என்றார்.
ரியல் கொசக்ஸி பசப்புகழான அமன் பாண்டே குறித்து பலரும் ஆர்வத்துடன் இணையங்களில் தேடி வருகின்றனர்.
தேர்தல் முடிந்ததும் செம்ம அறிவிப்பு காத்திருக்கு.. முதல்வர் ஸ்டாலினே சொன்ன விஷயம்!