'அவருக்கான சரியான வாய்ப்பு கிடைக்கவே இல்ல'... 'முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்'... 'பிசிசிஐ இரங்கல்!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சதாஷிவ் பாட்டீல் (86) மரணத்திற்கு பிசிசிஐ இரங்கல் தெரிவித்துள்ளது.

நடுத்தர வேகப்பந்து வீச்சாளரான சதாஷிவ் பாட்டீல், பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றி இரு இன்னிங்ஸ்களிலும் ஜான் ரீட்டை ஆட்டமிழக்கச் செய்த அவர், 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இருப்பினும் அவர் மற்றொரு டெஸ்டுக்கு தேர்வு செய்யப்படவில்லை.
அதே நேரம், மகாராஷ்டிரா சார்பில் விளையாடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 1952 முதல் 1964ஆம் ஆண்டு வரை 36 முதல் தர ஆட்டங்களில் விளையாடியுள்ளார். லோயர் ஆர்டர் பேட்ஸ்மேனான பாட்டீல் 27 என்ற சராசரியுடனும், 83 விக்கெட்டுகளை வீழ்த்தியும் உள்ளார். அதில் மூன்று முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ரஞ்சி டிராபியிலும் அவர் தன்னுடைய மாநிலத்திற்கு கேப்டனாக இருந்துள்ளார்.
இந்நிலையில் கோலாப்பூரில் உள்ள ருய்கர் காலனியில் உள்ள அவருடைய வீட்டில் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் பாட்டீல் தூக்கத்தில் உயிரிழந்துள்ளார். அவருடைய சக வீரர்கள் கருத்துப்படி, ஒரு நல்ல பந்து வீச்சாளர் மற்றும் கிரிக்கெட் வீரரான பாட்டீலுக்கு அவருடைய முழு திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
