‘பொண்ணுக்கு நாகதோஷம் இருக்கு’.. ஆசிரமத்தில் கல்லூரி மாணவிக்கு நடந்த நள்ளிரவு பூஜை.. காலையில் காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஆசிரமம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர்
திருவள்ளூர் பெரியபாளையம் அருகே செம்பேடு பகுதியைச் சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவருக்கு ஹேமமாலினி (வயது 20) என்ற மகள் இருந்தார். இவர் தொடர் வயிற்றுவலி மற்றும் கழுத்து வலியால் அவதிப்பட்டுள்ளார். இதற்காக முனுசாமி என்ற பூசாரியை ராமகிருஷ்ணன் அணுகியுள்ளார். பூசாரி முனுசாமி ஊத்துக்கோட்டை அருகே உள்ள வெள்ளாத்துக்கோட்டை என்ற கிராமத்தில் கடந்த 20 வருடமாக ஆசிரமம் ஒன்றை நடத்தி வருகிறார்.
பூசாரி
இந்த சூழலில் கடந்த ஆண்டு முனுசாமியை சந்தித்த ராமகிருஷ்ணன், தனது மகளுக்கு உடலில் பிரச்னை இருப்பதாகவும், அதனை சரி செய்ய வேண்டுமென்றும் கூறியுள்ளார். உடனே ஹேமமாலினிக்கு நாக தோஷம் இருப்பதாகவும், இதை பூஜை செய்து சரி செய்ய வேண்டுமென்றும் வீசியுள்ளார். தொடர்ந்து அமாவாசை, பெளர்ணமி நாளன்று பூஜை செய்து வந்தால் தோஷம் நீங்கிவிடும் என்று கூறியுள்ளார்.
கல்லூரி மாணவி
இதை நம்பிய தந்தை ராமகிருஷ்ணன் கல்லூரி படிக்கும் தனது மகளை தொடர்ந்து பூஜைக்கு அழைத்து வந்துள்ளார். நாட்கள் செல்ல செல்ல வாரத்துக்கு 2, 3 நாட்கள் என ஆசிரமத்திலேயே மாணவி தங்கி வந்துள்ளார். தொடர்ந்து பூசாரி முனுசாமிக்கு பணிவிடைகளும் செய்து வந்துள்ளார். இதேபோல் கடந்த 13-ம் தேதி நள்ளிரவு வரை பூசாரிக்கு பணிவிடை செய்ததாக தெரிகிறது.
இந்த நிலையில் அடுத்த நாள் காலை மாணவி ஹேமமாலினி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. உடனே மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்த பூசாரி, தங்களது மகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனை அடுத்து விரைந்து வந்த மாணவியின் பெற்றோர், அவரை திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
மரணத்தில் சந்தேகம்
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவி நேற்று சிகிச்சை பலனின்றி மாணவி உயிரிழந்தார். இந்த நிலையில் தங்களது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஹேமமாலினியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக பென்னலூர் பேட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரம் ஒன்றில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எந்த ஒரு பிரச்சினைக்கும் தற்கொலை தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு பேசவும்.
மாநில உதவிமையம் : 104
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050

மற்ற செய்திகள்
