'அசுர' வேகத்தில் வந்த 'லாரி'... மோதிய 'வேகத்தில்' தூக்கி வீசப்பட்ட இருச்சக்கர 'வாகனம்'... கணவன் கண் முன்னே மனைவிக்கு நேர்ந்த 'கொடூரம்'...

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 05, 2020 04:08 PM

அம்பத்தூரிலிருந்து கணவருடன் இருச்சக்கரவாகனத்தில் சென்ற பெண் லாரி மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.

The woman who went her husband on bike Killed in an accident

அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு செல்லியம்மன் நகரை சேர்ந்தவர் சேட்டு. இவரது மனைவி சகுந்தலா. இவர்கள் இருவரும் இருச்சக்கரவாகனத்தில் அம்பத்தூரிலிருந்து அயப்பாக்கம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பின்னே அசுர வேகத்தில் வந்து கொண்டிருந்த லாரி ஒன்று கட்டப்பாட்டை இழந்து இவர்கள் மீது மோதியது. இதில் சேட்டு தூக்கி வீசப்பட்டார். அவரது மனைவி லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.  இதுகுறித்து அயப்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #AMBATUR #LORRY ACCIDENT #WOMAN KILLED #AYAPPAKKAM #POLICE INVESTIGATE