'தமிழகத்தில்' கொரோனாவால்... 'ஒரே நாளில்' 2 பேர் 'உயிரிழப்பு'... 3 ஆக 'உயர்ந்த' பலி எண்ணிக்கை...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கொரோனாவால் இன்று ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் தமிழகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக கொரோனா பாதிப்பால் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
டெல்லி மாநாட்டிற்குச் சென்று திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த 51 வயது ஆண் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதையடுத்து அவருக்கு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நேற்று இரவு அவருக்கு மூச்சுத்திணறல் அதிகமானதை தொடர்ந்து இன்று காலை 7.45 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 53 வயது பெண் ஒருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். உயிரிழந்த பெண்ணின் கணவரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
