ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக் கொலை.. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு.. யார் இந்த அபு இப்ராஹிம் அல் குரைஷி?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 03, 2022 10:40 PM

அமெரிக்கா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டரில் பக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் சுட்டுகொல்லப்பட்டதாக பதிவிட்டுள்ளார்.

US Joe Biden says ISIS leader Abu al-Hashimi shot dead

பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் ஐ.எஸ்.ஐ.எஸ்:

ஈராக் போரின் போது உருவான ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு, கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் அல்கொய்தா தீவிரவாத அமைப்புடன் இணைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

ஈராக்கில் கலிஃபா ஆட்சி:

அதோடு ஈராக்கில் சன்னி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளைக் கைப்பற்றி வருவதோடு ஈராக்கில் கலிஃபா ஆட்சியை நிறுவி, அதை சிரியா முழுவதும் விரிவுபடுத்தும் நோக்கத்தில் ஐ.எஸ்.ஐ.எஸ் செயல்படுவது அனைவரும் அறிந்ததே.

ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி சுட்டுக்கொலை:

இதற்கு முன் அல்கொய்தா அமைப்பின் தலைவரான பின் லேடனை கொன்று வீழ்த்திய பின், ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பிறகு அமெரிக்கா குறிவைத்து வந்தது. அதன்படி தற்போது, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவரான அபு அல் ஹாசிமி சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இதுக்குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'நேற்றிரவு எனது வழிகாட்டுதலின் பேரில், அமெரிக்க இராணுவப் படைகள் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டன. நமது ஆயுதப் படைகளின் துணிச்சலுக்கு நன்றி, ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷியை போர்க்களத்தில் இருந்து அகற்றியுள்ளோம்' எனக் கூறியுள்ளார்.

யார் இந்த அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி அல்-குரைஷி?

சிரியா மற்றும் இராக்கில் ஆதிக்கம் செலுத்தி வந்த தீவிரவாதிகள் ஐஎஸ்ஐஎஸ் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தனர். இராக் கையும், சிரியாவின் ஒரு பகுதி மற்றும் துருக்கியின் ஒரு பகுதி ஆகியவற்றை இணைத்து தனி முஸ்லிம் நாட்டை உருவாக்குவது இவர்களது திட்டமாகும். இதன் முதல்கட்டமாக, சில ஆண்டு களுக்கு முன்னர் சிரியாவின் எல்லையோரம் உள்ள இராக்கின் மொசூல் நகரை கைப்பற்றிய இப்படையினர் அங்கிருக்கும் கிறிஸ்தவர்கள், யாஸிதிகள் மற்றும் குர்த் இன மக்களை துரத்தி விட்டு முஸ்லிம் அரசை அமைத்துள்ளதாக அறிவித்தனர். 

மொசூல் நகரில் ஆட்சிபீடமாக அமைத்து தங்களது அமைப்பின் பெயரை ஐ.எஸ். (இஸ்லாமிக் ஸ்டேட்) என்றும் சுருக்கி கொண்டனர். சிரியா, இராக் ஆகிய நாடுகளின் சில பகுதிகள், ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டில் வந்தன. இதன் தலைவராக இருந்து வந்தவர் இராக்கை சேர்ந்த அபுபக்கர் அல் பாக்தாதி. இவரை கடந்த 2019ல் டிரம்ப் தலைமையில் இருந்த அமெரிக்க அரசின் உத்தரவின் இதே அமெரிக்க துருப்பு படைகள் கொன்றது. அவரின் மரணத்துக்குப் பிறகு ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவராக பொறுப்பேற்றவர் தான் இந்த அபு இப்ராஹிம் அல் ஹஷிமி அல் குரேஷி.

முந்தைய தலைவர் அல் பாக்தாதியைக் கொன்றுவிட்டதாக மசந்தோஷப் பட வேண்டாம். இதற்கு நாங்கள் பழி தீர்ப்போம்" என சபதமிட்டார்.

Tags : #US #JOE BIDEN #ISIS #ABU AL-HASHIMI #DEAD #ஜோ பைடன் #ஐ.எஸ்.ஐ.எஸ் #அபு அல் ஹாசிமி

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. US Joe Biden says ISIS leader Abu al-Hashimi shot dead | World News.