17 வயசுலயே மில்லியனர் ஆகிட்டேன்.. இனி பில்லியனர் ஆகுறதுதான் ஒரே டார்கெட்.. திரும்பிப் பார்க்க வச்ச இளைஞர்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்இளம் வயதில் மில்லியனராக இளைஞர் ஒருவர் உருவெடுத்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி
டெல்லியை சேர்ந்தவர் இவான் சிங் லூத்ரா. இவர் 12 வயதாக இருக்கும் போது தனது தந்தையின் கால் சென்டரில் கம்ப்யூட்டர் கோடிங் கற்றுக் கொண்டுள்ளார். இதனை அடுத்து 15 வயதுக்குள் மொபைல் ஆப், வெப்சைட் போன்றவற்றை சொந்தமாக உருவாக்கி விற்பனை செய்யத் துவங்கினார்.
மொபைல் ஆப்
இவான் சிங் லூத்ரா உருவாக்கிய ஆப்களைப் லட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். தான் உருவாக்கிய 30 மொபைல் ஆப்களை, பல மில்லியன் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் 17 வயதில் மில்லியனர் ஆகியுள்ளார்.
ஆப்பிள் ஸ்டீவ் ஜாப்ஸ்
இதன்மூலம் ஆப்பிள் நிறுவனத்தின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸின் தொடர்பு இவான் சிங் லூத்ராவுக்கு கிடைத்தது. இதனை அடுத்து ஆப்பிள் ஆப் ஸ்டோர் குறித்து ஆலோசனை பெற உலகம் முழுவதிலும் இருந்து முக்கியமானவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதில் இவான் சிங் லூத்ராவும் ஒருவர் ஆவார்.
கனவு
தற்போது 300-க்கும் அதிகமான நிறுவனத்தை உருவாக்கி முதலீடு செய்து வருகிறார். இதனால் தனது 30 வயதில் பில்லியனர் என்ற நிலையை அடைவேன் என இவான் சிங் லூத்ரா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார். இவர் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை ஆச்சரியமடைய வைத்துள்ளது.

மற்ற செய்திகள்
