'மாஸ் நடிகரின் பிறந்த நாளுக்கு பேனர்!'.. 'மின்சாரம்' பாய்ந்து 3 ரசிகர்களுக்கு நேர்ந்த பரிதாபம்... நிதியுதவி அளிக்கும் திரைப்பிரபலங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாநடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளுக்கு அவரது ரசிகர்கள் 3 பேர் பேனர் வைக்கும்போது மின்சாரம் பாய்ந்து பலியாகியதை அடுத்து அவரது குடும்பத்தினருக்கு நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நிதியுதவி அளித்துள்ளனர்.

தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாண் தனது பிறந்த நாளை (செப்டம்பர் 2) இன்று கொண்டாடி வருகிறார். திரையுலகப் பிரபலங்கள், தயாரிப்பாளர்கள், அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களைச் சொல்லி வரும் நிலையில், அவடது பிறந்த நாளை முன்னிட்டு, அவருக்காக 25 அடி பேனர் ஒன்றை அவரது ரசிகர்கள் நேற்றைய தினம் வைத்தனர்.
அப்போது மின்சார ஒயர் மீது பேனர் பட்டு, அனைவர் மீதும் மின்சாரம் பாய்ந்ததில், சோமசேகர், ராஜேந்திரா மற்றும் அருணாச்சலம் ஆகிய 3 ரசிகர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஆந்திரத் திரையுலகினரை பெரும் சோகத்தை உண்டாக்கியுள்ளது. பவன் கல்யாண் நடித்து வரும் 'வக்கீல் சாப்' படத்தின் தயாரிப்பாளர்களான தில் ராஜு மற்றும் போனி கபூர் பலியானவர்கள் குடும்பத்துக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்குவதாகவும் அறிவித்துள்ளனர்.
இதேபோல் பவன் கல்யாணின் அடுத்த பட தயாரிப்பாளரான ஏ.எம்.ரத்னமும் பலியானவர்கள் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவியை அறிவித்துள்ளார். நடிகர்கள் ராம் சரண் தலா 2.5 லட்ச ரூபாய், அல்லு அர்ஜுன் தலா 2 லட்ச ரூபாய் நிதியுதவி அறிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
