வீட்டிலிருந்து வந்த ‘துர்நாற்றம்’.. அழுகிய நிலையில் கிடந்த ‘அண்ணன், தங்கை’.. சென்னையில் நடந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் வீட்டுக்குள் அண்ணன், தங்கை அழுகிய நிலையில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகர் 5-வது பிளாக் 115-வது தெருவில் உள்ள வீடு ஒன்றில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் வந்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது வீட்டுக்குள் ஆண், பெண் இரண்டு நபர்களின் உடல் அழுகிய நிலையில் கிடந்துள்ளன. படுக்கையறையில் உள்ள மெத்தையில் ஆணின் சடலமும், மற்றொரு அறையில் பெண்ணின் சடலும் கிடந்துள்ளது. இவர்களுக்கு 45 வயதிலிருந்து 50 வயதிருக்கும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து இரு உடல்களையும் கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் சோதனை செய்தபோது சின்னத்திரை நடிகர் சங்கம் அடையாள அட்டை இருந்துள்ளது.
இதன்பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் இறந்தவர்கள் அண்ணன், தங்கையான ஸ்ரீதர் மற்றும் ஜெய கல்யாணி என்பது தெரியவந்துள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக இருவரும் இந்த வீட்டில் வசித்து வருவதாகவும், இதுவரை இருவருக்கும் திருமணம் ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
