VIDEO: யாஷிகா ஆனந்தோட கார் 'ஆக்சிடன்ட்' ஆனது எப்படி...? 'உயிரிழந்த தோழி குறித்த பின்னணி...' - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகை யாஷிகா ஆனந்த், நண்பர்களுடன் நள்ளிரவில் செங்கல்பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது அவரது கார் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பாகியுள்ளது.

சில வருடங்களுக்கு முன் வெளிவந்த இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படம் மூலம் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த், மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 3-ல் பங்கேற்று ஏராளம் ரசிகர்களை பெற்றார்.
இவர் நேற்று (24-07-2021) நள்ளிரவு காரில் சென்றுக் கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், தடுப்பு சுவரில் வேகமாக மோதி அங்கிருந்த பள்ளத்தில் உருண்டு கீழே விழுந்தது. இதனை அடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உடனடியாக வந்து காரில் இருந்தவர்களை மீட்டனர். மேலும், அருகில் இருந்த தனியார் மருத்துவமனையில் கொண்டுப்போய் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கிடையில், நடிகை யாஷிகா ஆனந்துடன் காரில் பயணித்த, அவருடைய நெருங்கிய தோழியான வள்ளிச்செட்டி பவானி என்பவர் விபத்து நடந்த இடத்தில் கொஞ்சம் நேரத்துலையே உயிரிழந்தார்.
வள்ளிசெட்டி பவானியின் உடல் மாமல்லபுரம் காவல் துறையினரால், கைப்பற்றப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் போஸ்ட் மார்ட்டம் செய்யப்படுவதற்காக ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில், உயிரிழந்த தோழியின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அவர் அமெரிக்காவில் மென்பொருள் துறையில் பணிபுரிந்துள்ளார். மேலும் இவர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்த வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
