‘கொரோனாவை’ குணப்படுத்தும்... வதந்தியை ‘நம்பி’ செய்த காரியத்தால்... ‘300 பேருக்கு’ நிகழ்ந்த துயரம்... ‘அதிரவைக்கும்’ சம்பவம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 27, 2020 08:05 PM

ஈரானில்  கொரோனாவைக் குணப்படுத்தும் என நம்பி மெத்தனால் கலந்த  ஆல்கஹாலைக் குடித்த 300 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus Iran 300 Dead After Drinking Industrial Alcohol

கொரோனா வைரஸால் தீவிர பாதிப்பை சந்தித்துவரும் ஈரானில் இதுவரை 29,000 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும்  2,200 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஆல்கஹால் குடித்தால் கொரோனா குணமாகும் என்ற வதந்தியை நம்பி ஈரானில் ஏராளமானோர் மெத்தனால் கலந்த ஆல்கஹாலைக் குடித்துள்ளனர். இந்த வதந்தியை நம்பி குழந்தைக்கு கூட பெற்றோர்கள் மெத்தனால் கலந்த ஆல்கஹாலைக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஈரானிய ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனா அச்சுறுத்தலால்  மெத்தனால் கலந்த ஆல்கஹால் குடித்ததில் 300 பேர் வரை உயிரிழந்துள்ளனர் எனவும், இதுவரை 1,000க்கும் மேற்பட்டோரின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஈரானில் ஆல்கஹால் தடை செய்யப்பட்ட ஒன்று என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Tags : #CORONAVIRUS #IRAN #ALCOHOL #DEAD #ILLA #RUMOUR