அவன எப்டியாச்சும் 'கண்டுபுடுச்சு' குடுங்க... 10,000 ரூபாய் அளிப்பதாக 'போஸ்டர்' ஒட்டிய டிரைவர்... கடைசியில் நடந்த நெகிழ்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கண்டுபிடித்து அளிப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் என போஸ்டர் அடித்து ஒட்டினார்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர் சிவகுமார். சென்னையில் டிரைவராக பணியாற்றி வரும் இவர் கடந்த 12 வருடங்களாக டைசன் என்ற நாயை அன்புடன் வளர்த்து வந்தார். வேலை விஷயமாக சென்னைக்கு வரும்போது தனது அக்கா மகனிடம் டைசனை ஒப்படைத்து இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 29-ம் தேதி முதல் டைசனை காணவில்லை. இதனால் வேதனை அடைந்த சிவகுமார் டைசனின் புகைப்படத்துடன் போஸ்டர் ஒன்றை அடித்து கண்டுபிடித்து தருபவர்களுக்கு ரூபாய் 10 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என அறிவித்தார். இதைக்கண்ட பொதுமக்கள் டைசனை கண்டுபிடிக்க ஆர்வம் காட்டினர்.
தொடர்ந்து ஏரிக்கரை ஒன்றின் அருகில் இருந்து டைசனை இளைஞர்கள் சிலர் கண்டுபிடித்து சிவகுமாரிடம் ஒப்படைத்தனர். மகிழ்ச்சி அடைந்த சிவகுமார் போஸ்டரில் தெரிவித்து இருந்ததை போலவே ரூபாய் 10 ஆயிரத்தை அன்பளிப்பாக வழங்கினார். இதைப்பார்த்த பொதுமக்கள் இந்த காலத்தில் இப்படி ஒரு அன்பா? என்று வியந்து போயினர்.

மற்ற செய்திகள்
