'கடிச்சே கொன்ருக்கு...' 'நள்ளிரவில் பாம்பிடம் விடாமல் போராடிய நாய்...' கோமா நிலையில் உயிருக்கு போராட்டம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மதுரையில் தன் எஜமானரை காப்பாற்ற கண்ணாடி விரியன் பாம்போடு சண்டைப் போட்டு கோமா நிலைக்கு சென்ற புல்லிகுட்டா நாய்க்காக மக்கள் பிராத்தனை செய்து வரும் சம்பவம் அனைவரிடமும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரையில் ஒரு குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் ஒரு தம்பதியினர் தங்களுக்கு விருப்பமான செல்ல பிராணியான 'புல்லிகுட்டா' என்னும் நாட்டு நாயை தங்கள் வீட்டில் வளர்த்து வந்துள்ளனர். தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டிலியே இருக்கும் குடும்பத்தாருக்கும் புல்லிகுட்டா தான் பொழுதுபோக்கு.
எப்போதும் போல் நேற்று இரவு தனது நாயுடன் விளையாடி விட்டு உறங்க சென்ற குடும்பத்தாருக்கும் காலையில் அதிர்ச்சிகரமான காட்சி வாசலில் காத்துக்கொண்டிருந்தது.
ஆசையாக வளர்த்து வந்த புல்லிகுட்டா முகம் வீங்கி தரையில் மயங்கிய நிலையில் கீழே கிடந்துள்ளது மேலும் அதன் பக்கத்தில் 3 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பும் இருந்துள்ளது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் கால்நடை மருத்துவர் மெரில் ராஜ்க்கு போன் செய்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர்.
நேற்று இரவு வீட்டில் நுழைய முயற்சித்த கண்ணாடி விரியனை புல்லிகுட்டா தடுக்க முயன்றுள்ளது. இதனால் நாய்க்கும் பாம்புக்கும் இடையில் நடந்த சண்டையில் பாம்பு நாயின் தொடை, முகம் உள்ளிட்ட பல இடங்களில் கடித்துள்ளது. அதற்கு அசராத புல்லிகுட்டா பாம்பை கடித்துக் கொன்று விட்டது. இருப்பினும் பாம்பின் விஷம் நாய்க்கு ஏறியதால் தற்போது கோமா நிலைக்கு சென்றுள்ளது.
மேலும் பாம்பை கடித்த புல்லிக்குட்டாய் நாய், இந்திய பாரம்பரிய வகையை சார்ந்த நாய் எனவும் தற்போது பாம்பு கடித்ததால் நாய் முகம் வீங்கி காணப்படுகிறது. மேலும் அதன் சுவாசத்திற்கும் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சுவாச கோளாறுகளுக்கு மனிதர்களை போல் வெண்டிலேட்டர் வைத்து செயற்கை சுவாசம் அளித்தால் மட்டுமே அந்த நாயைக் காப்பாற்ற முடியும். ஆனால், அதற்கான வாய்ப்பு குறைவு என்பதால் தற்போது விஷயத்தை முறிக்க மருந்தை குளுக்கோஸ் வழியாக ஏற்றிக் கொண்டிருக்கிறாம். முடிந்தளவு சிகிச்சை அளிக்கிறாம். ஆனால், நாய் உயிர் பிழைப்பதற்கான சாத்யக்கூறு குறைவுதான் எனக்
கால்நடை மருத்துவர் மெரில் ராஜ் கூறியுள்ளனர்.
புல்லிக்குட்டா நாய்க்காக அதன் குடும்பத்தாரும் அப்பகுதி மக்களும் பிராத்தனை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் சமூகவலைதங்களில் பரவி அனைவரது மனதையும் கனக்கச்செய்துள்ளார்.