‘செல்ல’ நாயைக் காப்பாற்றிய மருத்துவர்கள்... ‘ரூ 42 கோடி’ செலவு செய்து ‘நன்றி’ சொன்ன ‘சிஇஓ!’... ‘வியப்பில்’ ஆழ்த்தும் சம்பவம்...
முகப்பு > செய்திகள் > உலகம்தன்னுடைய செல்ல நாயைக் காப்பாற்றிய மருத்துவர்களுக்கு வெதர்டெக் நிறுவன சிஇஓ 42 கோடி ரூபாய் செலவு செய்து நன்றி தெரிவித்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

வெதர்டெக் எனும் பிரபல கார் உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனத்தின் சிஇஓ டேவிட் மேக்நெய்ல், ரெட்ரீவர் ரக நாய் ஒன்றிற்கு ஸ்கௌட் எனப் பெயரிட்டு வளர்த்து வருகிறார். இந்நிலையில் அவருடைய செல்ல நாய்க்கு இதயத்தில் கட்டி வளர்ந்திருப்பதோடு, ரத்தக்குழாயில் புற்றுநோய் பாதிப்பு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து ஸ்கௌட் அமெரிக்காவின் விஸ்கன்சின் கால்நடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையால் ஸ்கௌட் பூரண நலமடைய, அந்த மருத்துவர்களை கவுரவிக்க நினைத்துள்ளார் மேக்நெய்ல். இதைத்தொடர்ந்து சூப்பர் பவுல் கால்பந்தாட்டப் போட்டியில் இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 42 கோடி செலவு செய்து நாய்களை பாதிக்கும் புற்று நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விளம்பரம் செய்து அந்த மருத்துவர்களுக்கு அவர் நன்றி தெரிவித்துள்ளார்.
