'ஒரே ஒரு கண்ணுடன் பிறந்த'... 'அதிசயமான நாய்க்குட்டி'... 'மினியன் கார்ட்டூன் போன்று'... 'ஆச்சரியத்தில் ஆழ்த்தும் சம்பவம்'!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Sangeetha | Feb 04, 2020 05:43 PM

தாய்லாந்தில் மினியன் கார்ட்டூன் கதாபாத்திரம் போன்று ஒற்றை கண்ணுடன் பிறந்துள்ள நாய்க்குட்டி அங்கு வசித்து வரும் சுற்றுவட்டார மக்களின் செல்லப்பிள்ளையாக மாறியுள்ளது.      

Puppy born with one Eye, look like Minions Cartoon character

அந்நாட்டின் சச்சோயெங்சாவோ மாகாணத்தில் (Chachoengsao), சோம்ஜாய் ஃபும்மான் (Somjai Phummaman) என்ற அரசு ஊழியர் வளக்கும் நாய், கடந்த ஞாயிற்றுகிழமை 2 குட்டிகளை ஈன்றது. அதில் ஒன்று நெற்றியில் ஒரே ஒரு கண்ணுடனும் அதன் மேல் சிறிய வால் ஒன்றுடனும் வித்தியாசமான தோற்றத்தை இருப்பதை கண்டு ஆச்சரியமைடைந்த உரிமையாளர், அந்த நாய்க்குட்டிக்கு சைக்ளோப்ஸ் என்று பெயரிட்டு மிகவும் பாசத்துடன் வளர்த்து வருகிறார்.

இந்த நாய்க்குட்டியை பார்க்க வந்த அவர் வீட்டு பக்கத்து வீட்டுக்காரர் இந்த நாய்க்குட்டி பிரபலாமான கார்ட்டூன் கதாப்பாத்திரம் கொண்ட மினியன்ஸை போல இருப்பதாகக் கூறியுள்ளார். ‘சைக்ளோப்ஸ்’ நாய்க்குட்டியை அதிர்ஷ்டமாக கருதும் அந்தப் பகுதி மக்கள், தங்கள் வாங்கும் லாட்டரி எண்களுக்கு அதன் பிறந்த தேதியைப் பயன்படுத்துகின்றனர்.

Tags : #THAILAND #PUPPY #DOG #MINION CARTOON CHARACTER