'குழி தோண்டி புதைச்சிட்டு இருந்தாரு...' 'கண்டிப்பா கொரோனா தான்...' 'புதைச்ச இடத்துல போனப்போ தான் உண்மை தெரிஞ்சுது...' பரபரப்பு சம்பவம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Apr 29, 2020 10:36 PM

திருப்பூரில் தன் இறந்த நாயை குழி தோண்டி புதைத்த ஒருவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவரை அடக்கம் செய்ய குழி தொண்டியதாக உருவாகிய வதந்தியால் பதறியுள்ளனர் அப்பகுதி மக்கள்.

The rumor spread that the dead dog was buried

திருப்பூர் நொய்யல் ஆற்றின் ஓரத்தில் காரில் வந்து இறங்கிய மர்மநபர் ஒருவர்  நீலநிற துணியால் சுற்றிய ஒன்றை மண்ணில் புதைத்துள்ளார். இதனை பார்த்த அப்பகுதியை சேர்ந்த பெண், கொரோனாவால் உயிரிழந்தவரை தான் இப்படி புதைப்பார்கள் என எண்ணி தன் பகுதி மக்களிடம் பதற்றத்துடன் கூறியுள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் அனைவரும் இணைந்து, தங்கள் பகுதியில் மர்மநபர் ஒருவர் யாருக்கும் தெரியாமல் கொரோனா பாதித்தவரை குழி தோண்டி புதைத்ததாக போலீசாருக்கு தெரிவித்துள்ளனர்.

இதனால் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த திருப்பூர் வடக்கு போலீஸ்  இன்ஸ்பெக்டர் கணேசன் அப்பகுதியில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகள் மூலம் மர்மநபர் வந்த கார் எண்ணை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நொய்யல் ஆற்றிற்கு வந்த அந்த நபர் திருப்பூர் ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டதில், அவரது வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் உடல்  நலக்குறைவால் இறந்துள்ளது. அதனால் அவரது நாயை நீலநிற துணியால் சுற்றி, பெத்திசெட்டிபுரம் பகுதியில் குழி தோண்டி புதைத்ததும் தெரியவந்தது.

மேலும் நாய் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற போலீசார், அந்த புதைத்த இடத்தை பார்வையிட்டதில் சிறிய அளவிலான குழிதான்  தோண்டப்பட்டிருந்தது எனவும், அவர் தன் நாயை தான் புதைத்துள்ளார் எனவும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இதனால் ஒரு விதத்தில் அப்பகுதி மக்கள் சந்தோசம் அடைந்திருந்தாலும், கொரோனா பாதித்தவரை புதைத்ததுள்ளார் என தேவையில்லாத வதந்தியையும் உருவாக்கியுள்ளனர் பெத்திசெட்டிபுர பகுதி மக்கள்.

Tags : #DOG #CORONA