‘கவனிப்பின்றி’ கைவிடப்பட்டு... ‘படுக்கையிலேயே’ நிகழும் மரணங்கள்... ‘மார்ச்சுவரி’ ஆக மாற்றப்பட்ட ‘ஷாப்பிங்’ சென்டர் ‘ஐஸ்’ ரிங்க்... ‘அதிரவைக்கும்’ நிலவரம்...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Mar 24, 2020 05:06 PM

கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினின் தற்போதைய நிலை உலக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Coronavirus Spain Old People Found Abandoned Ice Rink Now Mortuary

கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் உள்ள முதியோர் இல்லங்களை கவனிக்க ராணுவ வீரர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து கிருமிநாசினி மூலம் முதியோர் இல்லத்தை சுத்தம் செய்யச் சென்ற அவர்களுக்கு பெரும் அதிர்ச்சி ஒன்று காத்திருந்துள்ளது. அவர்கள் சுத்தம் செய்யச் சென்ற இடத்தில் நோயினால் பாதிக்கப்பட்டு, கைவிடப்பட்ட முதியோர்கள் சிலர் படுக்கையிலேயே உயிரிழந்து கிடந்துள்ளனர். இதுபோல கைவிடப்பட்டு 12 முதியோர்கள் பரிதாபமாக இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,182 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அங்கு 462 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் ஸ்பெயினின் மேட்ரிட் நகரில் உள்ள ஐஸ் பேலஸ் என்ற  ஷாப்பிங் சென்டரில் உள்ள ஐஸ் ரிங்க் தற்காலிக மார்ச்சுவரியாக மாற்றப்பட்டுள்ளது.

Tags : #CORONAVIRUS #SPAIN #MADRID #MORTUARY #ICERINK