'இருமல்', 'காய்ச்சல்'கள் கொரோனா தொற்றின் அறிகுறியா? ... 'யாருக்கு எல்லாம் ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்யலாம்'? ... விளக்கம் தரும் சுகாதாரத்துறை அமைச்சர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 20, 2020 04:41 PM

கொரோனா வைரஸ் தொடர்பாக யாரெல்லாம் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டுமென தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கமளித்துள்ளார்.

TN Health Minsiter explains about who need to test for Corona

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனை கட்டுக்குள் கொண்டு வர மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை, காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை இந்திய மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளார்.

இந்நிலையில், தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் யார் யார் எல்லாம் கொரோனா வைரஸ் தொற்று குறித்து ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது குறித்த விளக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 'காய்ச்சல், இருமல் வந்ததும் மக்கள் கொரோனா வைரஸ் தொற்றாக இருக்குமோ என அச்சம் கொள்ள வேண்டாம். கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து கடைசி 14 நாட்களுக்குள் பயணம் செய்து வந்தவர்களுக்கு காய்ச்சல், இருமல், மூச்சு திணறல்கள் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவமனைகளில் சென்று மருத்துவர்களை அணுக வேண்டும். அதனால் அனைத்து காய்ச்சல் மற்றும் இருமல் அறிகுறிகளுக்கு ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய வேண்டாம்' என தெரிவித்துள்ளார்.

 

 

Tags : #VIJAYABASKAR #TAMILNADU #CORONA VIRUS