துப்பாக்கியால சுடுறார்.. காப்பாத்துங்க..கதறிய சென்னை போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Sep 30, 2019 05:10 PM

பொதுநபர் ஒருவர் போலீசை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது.

Open firing in Chennai Redhills area, details here!

சென்னை ரெட்ஹில்ஸ் சோலையம்மன் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல்.இவர் சென்னை குற்றப்பிரிவில் டிரைவராக வேலை செய்கிறார்.இவர் நேற்றிரவு மொண்டியம்மன் நகர் பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில்,தனது நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்துள்ளார்.அப்போது அந்த வணிக வளாகத்துக்கு சொந்தமான ராமநாதன் என்பவர் அங்கு வந்திருக்கிறார்.

வெற்றிவேல் பேசிக்கொண்டு நிற்பதையும் அவர் கையில் சிகரெட் இருப்பதையும் பார்த்த ராமநாதன் யாருடா என் இடத்துல நின்னு சிகரெட் குடிக்கிறது? என கேட்டிருக்கிறார்.பதிலுக்கு வெற்றிவேல் நீ யாருடா என்ன கேட்க, என கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.இதைத்தொடர்ந்து ராமநாதன் ஆத்திரத்தில் தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து வெற்றிவேலை நோக்கி சுட,குறிதவறி அங்குள்ள மணல் மேல் குண்டு பட்டிருக்கிறது.

இதில் பயந்துபோன வெற்றிவேல் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போன் பண்ணி சொல்ல,சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் ராமநாதனைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் ரெட்ஹில்ஸ் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.