‘அடுத்த 3 நாட்கள்’... ‘தென் தமிழகத்தில் கனமழை... தமிழ்நாடு வெதர்மேன் தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 29, 2019 12:16 PM

அடுத்து  வரும் 3 நாட்களுக்கு, டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

heavy rain alert in south and delta districts tn weatherman

வங்கக்கடலில், இலங்கைக்கு தெற்கே புதிய காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளது. இந்த காற்றழுத்த பகுதியானது, மெதுவாக நகர்ந்து குமரிக்கடற்பகுதியான கன்னியாகுமரி நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், டெல்டா முதல் தென் மாவட்டங்களில் அடுத்த 3 முதல் 4 நாட்களுக்கு கன மழை முதல், மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழ்நாடு வெத்ரமேன் கூறியுள்ளார்.

அதிலும் கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தேனி, விருதுநகர், திண்டுக்கல், குறிப்பாக கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார். 

சென்னையிலிருந்து திருச்சி வரை மேகக் கூட்டங்கள் தீவிரமாக பரவியிருக்கின்றன. இதன் காரணமாக அடுத்த இரு நாட்களுக்கு, சென்னையில் இடைவெளிவிட்டு மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. அதிகாலை நேரத்தில் சென்னை அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் நல்ல மழை பெய்யும். பகல் நேரத்தில் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் திடீர் மழைக்கும் வாய்ப்பு உண்டு என பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Tags : #HEAVY #RAIN #ALERT #PRADEEPJOHN #CHENNAI #TN