‘10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில்’.. ‘கனமழைக்கு வாய்ப்பு’.. ‘வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தகவல்’..
முகப்பு > செய்திகள் > தமிழகம்By Saranya | Oct 28, 2019 08:37 PM
தமிழகத்தில் 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வட தமிழகத்திலும், தென் தமிழகத்தின் ஓரிரு பகுதிகளிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தென் மண்டல வானிலை ஆய்வுமைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை குமரிக் கடல் பகுதிக்கு நகர்ந்து வலுப்பெறும்.
மேலும் வரும் 30, 31 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு அரபிக் கடல், லட்சத்தீவு பகுதிக்கு நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் குமரி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.