‘திருமணமான நான்கே மாதத்தில்’.. ‘அடுத்தடுத்து கணவன், மனைவி எடுத்த விபரீத முடிவு’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Oct 21, 2019 11:29 AM

திருவள்ளூர் அருகே திருமணமான 4 மாதத்தில் கணவன், மனைவி அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

Chennai Thiruvallur husband commits suicide after wife kills self

திருவள்ளூர் மாவட்டம் எளாவூரைச் சேர்ந்த அன்பு என்பவருக்கும், அருகே உள்ள நரசிங்கபுரம் பெரியமேடு கிராமத்தைச் சேர்ந்த லோகேஷ்வரி என்பவருக்கும் 4 மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்நிலையில் கடந்த 15ஆம் லோகேஷ்வரி தனது தாய் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து வரதட்சணை கேட்டும், சந்தேகப்பட்டும் லோகேஷ்வரியை அவரது கணவர் கொடுமைப்படுத்தி வந்ததாகவும், அதன்காரணமாகவே அவர் தற்கொலை செய்துகொண்டதாகவும், அவருடைய உறவினர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், லோகேஷ்வரியின் கணவர் அன்பு ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஒரு தனியார் விடுதியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அவருடைய உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். சந்தேகம் மற்றும் வரதட்சணை கொடுமையால் மனைவி தற்கொலை செய்துகொண்ட நிலையில், போலீஸ் விசாரணைக்கு பயந்தே அன்பு தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது.

Tags : #THIRUVALLUR #CHENNAI #COUPLE #HUBAND #WIFE #SUICIDE #HOTELROOM #NEWLYWED #MARRIAGE