‘காரை தீ வைத்து கொளுத்தி’... ‘கையில் துப்பாக்கியை வைத்துக்கொண்டு’... ‘மிரட்டல் விடுத்த இளைஞர்’

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 26, 2019 04:46 PM

காரில் வந்த இளைஞர் மற்றும் அவருடன் வந்த இளம் பெண் இருவரும், நடுரோட்டில் நாட்டுத் துப்பாக்கி கொண்டு பயமுறுத்தியதுடன், சொந்த காருக்கு தீவைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

youth set car ablaze and create high drama in Mathura

உத்தரப்பிரதேச மாநிலம், மதுரா எஸ்எஸ்பி அலுவலகம் அருகே, உள்ள சோதனை சாவடி முன்பு, ஒரு இளைஞரும், இளம் பெண் மற்றும் 3 குழந்தைகளுடன் நடுரோட்டில் தாங்கள் ஓட்டி வந்த காரிலிருந்து கீழே இறங்கினர். பின்னர் அந்த இளம்பெண் குழந்தைகளை சாலை ஓர திட்டில் உட்கார வைத்துவிட்டு, அவரும் உட்கார்ந்து கொண்டார். காரிலிருந்து இறங்கிய அந்த இளைஞர், தனது காரை தானே தீ வைத்து கொளுத்தினார். இதனால், பொதுமக்கள் அதிர்ந்து போயினர்.

காரில் எரிந்த தீயை அணைக்க முற்பட்டபோது, இளைஞரும், அந்தப் பெண்ணும் கையில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை கொண்டு காற்றில் சுட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த பொதுமக்கள் மட்டுமின்றி சோதனை சாவடி காவலர்களும் அதிர்ச்சிக்குள்ளாகினர். நீண்டப் போராட்டத்திற்குப் பின்னர் அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த கைத்துப்பாக்கி கைப்பற்றப்பட்டது.  இந்நிலையில் நடுரோட்டில் திகிலை ஏற்படுத்திய இருவர் குறித்தும் விசாரித்தனர்.

அதில், இந்த இளைஞர் ரீபைனரி காவல்நிலையத்திற்கு அருகே வசிக்கும் சுபம் சௌத்ரி என்பது தெரியவந்தது. அவருடன் வந்த இளம்பெண் அஞ்சுலா சர்மா என்பதும் தெரியவந்தது. முதலில் இந்த இளம் பெண்ணை தன்னுடைய மனைவி என்று கூறிய சுபம் சௌத்ரி, பின்னர் சகோதரி என்று மாற்றிக் கூறினார். இதனால் அவரிடம் மேலும் விசாரணை நடைப்பெற்று வருகின்றது. அவரின் மனநிலையில் சிறிது மாற்றம் தெரிவதால், அவரது குடும்பத்தாரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், வரும் நவம்பர் மாதம், சுபம் சௌத்ரிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. ஆனால் அதற்கு முன்னதாக தன் அலுவலகத்தில் பணிபுரிபவரும், இவருடன் கைதானவருமான அஞ்சுலா சர்மாவுடன் உறவு இருந்தது தெரியவந்ததால், அந்த திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே சுபம் சௌத்ரி நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. எனினும் முழு விசாரணைக்குப் பிறகே அனைத்து விவரங்களும் தெரிய வரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : #MATHURA #FIRE #COUPLE