'வேலூர்' அருகே பயங்கரம்... சிறுமியை 8 மாச 'கர்ப்பிணியாக்கிய' சொந்த அண்ணன்... அதிர்ச்சியில் 'பெற்றோர்' எடுத்த முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Feb 13, 2020 10:43 PM

சொந்த தங்கையை அண்ணனே பாலியல் பலாத்காரம் செய்து அவரை கர்ப்பிணியாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Sister got pregnant near Vellore, Brother arrested under Pocso Act

வேலூரை அடுத்த கிராமம் ஒன்றை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் மதுவிற்கு அடிமையாகி தினமும் குடிக்க ஆரம்பித்து இருக்கிறான். நாளடைவில் தினமும் குடிக்கும் அளவிற்கு அவன் மதுவிற்கு அடிமையாகி இருக்கிறான். இதில் நிதானமிழந்த அவன் கடந்த சில மாதங்களுக்கு முன் தன்னுடைய 16 வயது தங்கையை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்து இருக்கிறான்.

மேலும் இதுகுறித்து வெளியில் கூறினால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று தன்னுடைய தங்கையை அந்த சிறுவன் மிரட்டி இருக்கிறான். இதனால் பயந்து போய் அந்த சிறுமி யாரிடமும் கூறவில்லை. தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் அந்த சிறுமியை பார்த்து அதிர்ந்து போன பெற்றோர் இதுகுறித்து அந்த சிறுமியிடம் விசாரிக்க அப்போது நடந்த விஷயத்தை அந்த சிறுமி கூறியிருக்கிறார்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன பெற்றோர் போலீசிடம் இதுகுறித்து புகார் செய்ய, போலீசார் இதுகுறித்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்த 17 வயது சிறுவனை கைது செய்தனர். தொடர்ந்து  அவனை செங்கல்பட்டு சிறுவர் ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Tags : #POLICE #JAIL